திருவள்ளூரில் ஏற்பட பயங்கர தீ விபத்தில் 21 வீடுகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன பாத்திமா புரம் ஏன்ற பகுதியில் நடந்துள்ளது
குப்பை குவியலுக்கு வைக்கபட்ட தீ காற்றில் பரவி குடிசைகளை எரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன
தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தீயணைப்பு வண்டிகளில் ஒன்றில் தண்ணீர் இல்லை.
உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றபோதும், 21 குடிசைகள் தீயில் கருகி நாசம் ஆகியுள்ளன. இதற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.