5 ஆண்டு சட்ட போராட்டத்திற்குப் பின்னர் மிகவும் பழைமையும் பாரம்பரியமும் வாய்ந்த திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளங்கும் பொருளுக்கோ மத்திய அரசு புவிசார் குறீயிடு வழங்குகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம், பட்டுபுடவையின் பாரம்பரியமாக சோழ மன்னர்கள் காலத்திலிருந்து கலை நயத்துடன் அழகுற கைத்தறியால் உருவாக்கப்படுவதால் மத்திய அரசு திருபுவனம் பட்டு புடவைக்கு புவிசார் குறீயிடு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு?
