
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையை சேர்ந்த பயணி சரவணன் என்பவர் 352 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள் மற்றும் செயின் ஆகியவற்றை மலேசியாவில் இருந்து திருச்சிக்கு தனது உடமையில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். அவை அனைத்தும் பறிமுதல் செய்யபட்டன.