திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயினை துருக்கியில் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தன்னுடைய திருமணப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நுஷ்ரத் ஜகான் மேற்கு வங்கம் பஷிரத் என்னுமிடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நுஸ்ரஸ் ஜகான் சிவப்பு நிற லெஹன்கா உடையை திருமண உடையாக அணிந்திருந்தார்.
திருமணத்தில் நஷ்ரத் ஜகானின் பெற்றோர்கள், சகோதரி மற்றும் நெருங்கிய உறவினர்கள் போர்ட் டவுணுக்கு ஞாயிறு அன்று வந்தடைந்தனர். பெங்கால் நடிகை மிமி சக்கரவர்த்தி மணப்பெண் தோழியாக இருந்தார்.