அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டுவிட்டர் பதிவில் பெருங்காமநல்லூர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்!
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தமிழர்களின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பெருங்காமநல்லூர் தியாகிகளை அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன்.மகாத்மா காந்தியடிகள் காங்கிரசுக்கு தலைமையேற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி உயிரை விட மானம் பெரிது என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16தியாகிகளையும் போற்றுவோம்.தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்குச் சான்றாக பெருங்காமநல்லூர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாற்றில் எப்போதும் வாழ்வார்கள்…! என தெரிவித்து உள்ளார்.
தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது – டிடிவி தினகரன்
