திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின வரைவுத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து கடந்த வாரம் சமர்ப்பித்தனர். இந்நிலையில் திருத்தங்கள், புதிய அம்சங்களுடன் இறுதித் தேர்தல் அறிக்கையை உருவாக்குவது குறித்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான திட்டங்கள் வேலை வாய்ப்பு, தமிழக உரிமை சார்ந்த பிரச்சினைகள், விவசாயம் தொடர்பான அறிவிப்புகள், வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றைக் கொண்ட தேர்தல் அறிக்கையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *