திமுகவின் ஆட்சியில் ரத்து செய்யப்படும்?

தவழ்ந்து வந்து முதலமைச்சராகி, தன்னை அடையாளப்படுத்தியவருக்கு துரோகமிழைத்து, கொள்ளை மட்டுமல்ல கொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள எடப்பாடி பழனிசாமியையும்,பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த வெளிநாடுவாழ் பிரதமர் மோடியையும் ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் பேரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணிக்கு  மக்களின் வலி தெரியுமா? கமிஷனுக்காக விளைநிலங்களை அழித்து சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அதிமுக அரசு கொண்டுவருகிறது. மக்கள் ஏற்காத இந்தத் திட்டம் தி.மு.கழக ஆட்சியில் ரத்து செய்யப்படும். மக்களை பாதிக்காமல் சாலை வசதி மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *