தின பலன் 21/10/2018

மேஷம் :
(அசுபதி,பரணி,கார்த்திகை-1)

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் உங்களது சிந்தனைகளுக்கு விருந்தளிக்கும் விதமாக இன்று இருக்கும். அனுபவத்தை பயன்படுத்தி மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் செல்ல வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு தங்களது படிப்பின் மீது அதிக கவனம் செல்லும். மாணவர்களுக்கு சிறந்த நாளாகும்.

ரிஷபம்:

(கார்த்திகை 2,3,4 பாதங்கள் ரோகிணி,மிருகசீரிடம் 1,2)

இன்று உங்களுக்கு இரண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடைக்கும் நாளாக அமையும். அந்த இரண்டு வார்த்தைகள் பிரியம் மற்றும் விருப்பம். யார் இன்று உங்கள் மீது பாசத்தில் மற்றவர்களை கிறங்கடிக்கும் அளவிற்கு அவர்களும் நீங்களும் செயல்படுவீர்கள். உங்களது அனுபவ அறிவானது மற்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு உயர்ந்த மனநிலையில் வாழும் நிலையை அடைவீர்கள். இன்று மாலை ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இன்று உங்களது தவறுகள் கூட வெற்றியாக அமையும்.

மிதுனம்:

(மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

இன்று உங்களது எந்த முடிவிலிருந்து பின்வாங்காதீர்கள். ஏனென்றால் அடுத்தவர்களுக்கு இடம் கொடுத்தார் போல் ஆகிவிடும். இறுதியில் உங்களுக்கு வெற்றி கிட்டும். உங்களுக்கு உங்களது வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றிக்குரிய வாய்ப்பு உள்ளது. உங்களது அமைதிக்கு பரிசு கிடைக்க கூடிய நாள்.

கடகம்:

(நட்சத்திரம் புனர்பூசம் 4,பூசம்,ஆயில்யம்)

நீங்கள் உங்களது பழைய வேலைகளை அதாவது நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த அனைத்து வேலைகளையும் முடித்து விடுவீர்கள். உங்களது  வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படலாம். ஆனால் மாலை நேரம் வெற்றிகரமான நேரமாக அமையலாம். நீங்கள் உங்களது அன்பனவர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்

சிம்மம்:

(நட்சத்திரம் மகம், பூரம், உத்திரம்-1ஆம் பாதம்)

இன்று உங்களுக்கு அனைத்து விதத்திலும் சிறப்பான நாளாக அமையும். நீங்கள் விருப்பப்பட்ட பொருள்களை இன்றைய நாளில் வாங்கி மகிழ்வீர்கள். உயர்தர வாழ்க்கை அமையும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாலை நேரத்தில் நெருக்கமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

கன்னி:

(உத்திரம்-2,3,4, ஹஸ்தம், சித்திரை-1,2)

இன்று நீங்கள் புதிய மனிதராக தோற்றமளிப்பீர்கள். உங்களது சிந்தனைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். உங்களது புத்திசாலித்தனம் அனைத்து துறைகளிலும் மேம்படும். நீங்கள் எவ்வளவு பெரிய சிக்கலையும் உங்களது புத்திகூர்மை கொண்டு சமாளித்துவிடுவீர்கள்.

துலாம்:

(சித்திரை 3,4,சுவாதி,விசாகம் 1,2,3)

இன்று உங்களது அறிவை பல துறைகளிலும் வளர்த்துக் கொள்வீர்கள். உங்களது எண்ணங்கள் நேர்மையாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களது வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் அமையும். உங்களது உறவினர்களுடன் இன்றைய பொழுதை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்:

(விசாகம்-4, அனுஷம், கேட்டை)

இன்று நீங்கள் கவனமாக செயல்பட கூடிய நாளாகும். நீங்கள் உங்களது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் தோல்வி அடைய நேரலாம். கவலைப்படாதீர்கள் நாளை எல்லாம் சரியாகிவிடும்.

தனுசு:

( நட்சத்திரம் மூலம், பூராடம், உத்திராடம்-1)

இன்று உங்களுக்கு உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கக் கூடிய நாள். நீங்கள் உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேறு சில பயிற்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலர்கள் அடுத்தவர்களின் தவறுகள் உங்கள் கண்களுக்கு எளிதாக தெரியும்.

மகரம்:

(உத்திராடம்-2,3,4. திருவோணம், அவிட்டம்-1,2)

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெற்றி செய்தி தானாக வீடு தேடி வரும். உங்களுடைய நீண்ட நாளைய கோரிக்கைகள் நிறைவேறும். உங்களது உதவும் மனப்பான்மை எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையும். நீங்கள் உங்களது தற்போதைய வேலையை மாற்ற எண்ணுகிறீர்கள் ஆனால் அது தற்போதைக்கு தேவையில்லை. ஏனென்றால் சிறந்த செய்தி உங்களை தேடி வரும்.

கும்பம்:

(அவிட்டம்-3,4, சதயம், பூரட்டாதி-1,2,3)

இன்று உங்களுக்கு அலுவலகத்தில் கொடுத்த வேலைகள் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான வேலைப்பளு உங்களை மன உளைச்சல்லுக்கு ஆளவீர். உங்களுக்கு இந்த நிலைமை மாறும். மாலை நேரம் நிம்மதியான நேரமாக அமையும்.

மீனம்:

(பூரட்டாதி-4, உத்திரட்டாதி, ரேவதி)

இன்று நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள தயாராவீர்கள். உங்களது செலவினங்களை குறைக்க திட்டமிடுவீர்கள். அதற்கான வழிமுறைகளை கையாளுவீர்கள். முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *