தின பலன் 20/10/2018

மேஷம் :
(அசுபதி,பரணி,கார்த்திகை-1)

உலகத்துடன் நெருங்கிய தொடர்புள்ள மேஷ ராசி அன்பர்களே இன்று மேலும் தொடர்புகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அதிக நெருக்கம் காணப்படும். காதலர்களிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அதிக அன்பு செலுத்துவீர்கள். மொத்தத்தில் உங்களுக்கு இது சிறப்பான நாளாகும்.

ரிஷபம்:

(கார்த்திகை 2,3,4 பாதங்கள் ரோகிணி,மிருகசீரிடம் 1,2)

உங்களுக்கு இன்று பரிசு பாராட்டுக்களும் கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை உங்கள் மீது இன்று விழும். உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளும் திறமையாக கையாளக்கூடிய சக்தி கிடைக்கும். நீங்கள் சிறந்த வீரராக திகழ்வீர்கள்.

மிதுனம்:

(மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

இன்று நீங்கள் வழக்கமான பணிகளிலிருந்து விடுபட்டு இனிய சுற்றுப்பயணத்திற்கு செல்வீர்கள். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தோசமாக பொழுதை கழிப்பிர்கள். மாலை உங்களுக்கு தியானம் போன்றவற்றில் ஈடுபடு ஏற்ப்படும்.

கடகம்:

(நட்சத்திரம் புனர்பூசம் 4,பூசம்,ஆயில்யம்)

இன்று உங்களுக்கு வேலையிடங்களில் உங்களுக்கு எதிர்பார்த்த மதிப்பு மரியாதையும் கிடைக்காது. எவ்வளவுதான் சிறப்பாக பணியாற்றினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.அதை பொருட்படுத்தக்கூடாது. இன்று மாலை நேரங்களில் கவனச் சிதைவு ஏற்படலாம்.

சிம்மம்:

(நட்சத்திரம் மகம், பூரம், உத்திரம்-1ஆம் பாதம்)

இன்று உங்களுக்கு அன்பும் மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். இன்றைய நாளில் நீங்கள் அன்பானவர்களுடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். மாலை உங்களது தொழில் சகாக்களுடன் பொன்னான நேரத்தை செலவிட்டு பொருளீட்ட உகந்த நாளாகும்.

கன்னி:

(உத்திரம்-2,3,4, ஹஸ்தம், சித்திரை-1,2)

உங்களது வாழ்வில் திருப்பங்களை ஏற்படுத்தும் திருப்புமுனை நாளாகும். உங்கள் மனதில் பட்டது தெளிவாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் உங்களுக்கு ஏறுமுகமாக இருக்கும். கடவுள் மீது உங்களுக்கு பக்தி அதிகரிக்கும்.

துலாம்:

(சித்திரை 3,4,சுவாதி,விசாகம் 1,2,3)

நீங்கள் மிகவும் வித்தியாசமாக யோசிப்பவர்கள். இன்று உங்களது உற்சாகம் மற்றும் கற்பனை திறன் அதிகமாக காணப்படுவீர்கள். உங்களுக்கு இன்று கல்வி சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர்கல்விக்கு திட்டமிட அருமையான நாளாகும்.

விருச்சிகம்:

(விசாகம்-4, அனுஷம், கேட்டை)

சுயநலமில்லாத தங்களது பணிக்கு தக்க பரிசுகளை இன்று பெறுவீர்கள். சக்தியும், உற்சாகத்தையும் தரக்கூடிய நாளாக அமையக்கூடும். உங்களது இந்த உயர்ந்த வெற்றி எந்தவித தலைகனத்தையும் தராது. மற்றவருடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக கையாளுவது நல்லது.

தனுசு:

( நட்சத்திரம் மூலம், பூராடம், உத்திராடம்-1)

இன்று நீங்கள் புதிய அவதாரத்தை எடுப்பீர்கள். ஒரு கதாநாயகன் போல் செயல்படுவீர்கள் வேலைவாய்ப்பு சம்பந்தமான இனிய செய்தியை எதிர்பார்க்கலாம். நீங்கள் சக ஊழியர்களுடன் நெருக்கமாக பழகுவீர்கள். கணக்கு சம்பந்தமான துறையில் இருப்பவர்கள் இன்று நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

மகரம்:

(உத்திராடம்-2,3,4. திருவோணம், அவிட்டம்-1,2)

திட்டமிடுதலில் ஏற்பட்ட குறைபாடுகளால் எல்லாம் வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க தடுமாறுவீர்கள். நீங்கள் உங்களது தவறுகளை சரி செய்தால் எளிதாக இலக்கை அடையலாம். உங்களுக்கு திடீர் பண வரவிற்க்கு இன்று யோகம் உள்ளது. அவற்றை தேவையில்லாமல் செலவு செய்து விடாதீர்கள்.

கும்பம்:

(அவிட்டம்-3,4, சதயம், பூரட்டாதி-1,2,3)

இன்று நீங்கள் சிரமமான நாளாக உணர்வீர்கள். நீங்கள் உங்களது எதிரிகளுக்கு உங்களது தகுதியையும் திறமையையும் வெளிப்படுத்திவிர்கள். நீங்கள் உங்களது வியாபார யுக்தியை மாற்றுவீர்கள். உங்களது ஞாபகத்திறன் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்.

மீனம்:

(பூரட்டாதி-4, உத்திரட்டாதி, ரேவதி)

இன்று உங்களுக்கு பொருளாதாரா முன்னேற்றங்களும் சிறப்பான பலன்களை காத்துக் கொண்டுள்ளன. பலவிதமான பணம் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்களுக்கு மறைமுகமான தொந்தரவு தரக்கூடியவர்கள் கண்டறிவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *