தின பலன்

மேஷம் :
(அசுபதி,பரணி,கார்த்திகை-1)

உங்களது உயர்ந்த குறிக்கோள்கள், திட்டங்கள் குறிப்பிட்ட நிலையை அடையும். உங்கள் திட்டங்களை செயல்படுத்த சரியான நேரமாகும். உங்களது நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். நீங்கள் திடீர் முடிவுகள் எடுப்பது சிரமமிருக்காது.

 ரிஷபம்:

(கார்த்திகை 2,3,4 பாதங்கள் ரோகிணி,மிருகசீரிடம் 1,2)

உங்களுக்கு உடல்நிலையில் சற்று குறைபாடுகள் ஏற்படலாம். ஆனால் பெரிய தொந்தரவுகள் இருக்காது. டாக்டரை உடனே அணுகுவது நல்லது. பணத்திற்காக அதிக நேரம் செலவிட நேரும். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க இயலாத நிலை ஏற்படும்.

 மிதுனம்:

(மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

இன்று நீங்கள் உணர்ச்சிபூர்வமான முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உணர்ச்சி பிழம்பாக  இன்று காணப்படுவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். வருங்கால திட்டத்திற்கான முயற்சிகளுக்கு திட்டமிடுங்கள்.

கடகம்:

(நட்சத்திரம் புனர்பூசம் 4,பூசம்,ஆயில்யம்)

இன்று நீங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பீர்கள். வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கு திட்டமிடுவீர்கள். தொழில்கள் சிறப்பான நிலையில் உயர்வை நோக்கி செல்லும். திட்டமிட்டு செய்யும் வேலையில் நிச்சயம் வெற்றி உண்டு.

சிம்மம்:

(நட்சத்திரம் மகம், பூரம், உத்திரம்-1ஆம் பாதம்)

இன்று நீங்கள் அதிக எதிர் பார்ப்பு மற்றும் அதிக நம்பிக்கை உடையவராக திகழ்வீர்கள். இன்று நீங்கள்  மிகத் துல்லியமான திட்டமிடுதல் மூலம் இலக்கை அடைவீர்கள். பணபரிமாற்றம் சிறப்பான நிலையை அடையும்.

கன்னி:

(உத்திரம்-2,3,4, ஹஸ்தம், சித்திரை-1,2)

இன்று உங்களுக்கு உணர்வுபூர்வமான விஷயங்களை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். மீண்டும் மதியம் வரை தொடரும், மாலை நேரம்  மீண்டும் சாகச நிலைக்கு திரும்பும்.

துலாம்:

(சித்திரை 3,4,சுவாதி,விசாகம் 1,2,3)

இன்று உங்களது அரசாங்க சம்பந்தமான வேலைகள் அனைத்தும் எதிர்பார்த்தற்கு முன்பே முடிவடையும். அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பான நாள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களது நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். மாலை பொழுது சிறப்பாக அமையும்.

விருச்சிகம்:

(விசாகம்-4, அனுஷம், கேட்டை)

முடிந்த அளவுக்கு நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கே உங்கள் ஞாபக சக்தியின் மீது பெருமை கொள்வீர்கள். மதியம் ஆலோசனை, சந்திப்பு என பரபரப்பாக செயல்படுகிறீர்கள். சிறப்பான நாளாகும்.

 தனுசு:

( நட்சத்திரம் மூலம், பூராடம், உத்திராடம்-1)

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான பிணைப்பு இருக்கும். உங்கள் அன்பை அள்ளி தெளிப்பீர்கள். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

மகரம்:

(உத்திராடம்-2,3,4. திருவோணம், அவிட்டம்-1,2)

சமுதாயத்தில் இன்று மதிப்பும்,மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு பரபரப்பானாள் நாள் உங்களுக்கு வாழ்க்கை சம்பந்தமான முன்னேற்றம் தென்படும் நாள். புதிய தொழில்கள் தொடங்க அருமையான நாள். சுய தொழில் செய்பவர்கள் சிறப்பான நிலையை அடைவீர்கள்.

கும்பம்:

(அவிட்டம்-3,4, சதயம், பூரட்டாதி-1,2,3)

உங்களுக்கு இன்று சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நினைத்து வருத்தமடைவீர்கள். வார்த்தையை மிகவும் கவனமாக உபயோகிக்க வேண்டிய நாள்.வரவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

(பூரட்டாதி-4, உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் குடும்ப உறுப்பினர்கலாள் மனஅழுத்தம் ஏற்படும். தொழில் முறையில் ஏற்பட்ட பிரச்சனைகள் சற்று மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். புனித பயணம் மேற்கொள்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *