டி.டி.வி. தினகரன் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு கடந்த சில மாதங்களாகவே தனது கட்சியினரையும் பொதுமக்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார். தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டு தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே திருவாரூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்து கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இப்பொழுது நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டதாகவும் நாளை (12.3.2019) அல்லது நாளை மறுநாள் (13.3.2019) வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அவரது கட்சியினரிடம் ஆவல் அதிகரித்துள்ளது.