நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அவை பின்வருமாறு இடையூறு விளைவித்தல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என நான்கு பிரிவுகளிள் பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளது பின்வருமாறு தமிழக அரசையும், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களையும் விமர்சித்து தரக்குறைவாக பேசியதாக உதவி ஆய்வாளர் அவர்கள் புகார் அளித்துள்ளார். ஜூலை மாதம் நடத்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.