ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.
ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்விலா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 78 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் 4 விக்கெட்களை கைபற்றி அசத்தினார். ரிச்சர்ட்சன் 3 விக்கெட்களையும், ஸ்டார்க் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.