
சென்னையில் ஓலா, உபேர் நிறுவனங்களை கண்டித்து 30 ஆயிரம் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா, உபேர் கால் டாக்சிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இன்று திடீரென கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.