கட்டுரைகள்கிரிக்கெட்விளையாட்டு

திகைப்பூட்டிய டர்பன் டெஸ்ட் போட்டி

Durban Test match

திறமைகளை சோதித்து பார்க்கும் கிரிக்கெட்டை விரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக சனிக்கிழமை முடிவடைந்த டர்பன் டெஸ்ட் போட்டி அமைந்தது. அந்த டெஸ்ட் போட்டி பற்றிய சிறப்பு பதிவு  இது.தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி சனிக்கிழமை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. தென்ஆப்ரிக்க அணி நிர்ணயித்த 304 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து அசத்தியது இலங்கை.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி 235 ரன்களும், இலங்கை அணி 191 ரன்களும் எடுத்தனர். இரண்டாம் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் குவிண்டன் டி காக் முதல் இன்னிங்ஸில் 94 பந்துகளில் 80 ரன்களும், இரண்டாம் இன்னிங்ஸில் 63 பந்துகளில் 51 ரன்களும் அதிரடியாக ஆட்டத்தின் மூலம் எடுத்தார்.

நான்காம் இன்னிங்ஸில் கடினமான இலக்கை நோக்கி களம் கண்டது இலங்கை அணி. வேகபந்து வீச்சுக்கு சாதகமான டர்பன் பிட்சில் ஸ்டெய்ன், பிலாண்டர், ரபாடா, ஒலிவர் என வலிமையான வேகபந்து கூட்டணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது.110 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது இலங்கை அணி.

அதன் பின் இணைந்த குசால் பெரேரா தனஞ்சய டி செல்வா ஜோடி 96 ரன்கள் குவித்தது. மகாராஜ் பந்து வீச்சில் 48 ரன்களில் எல்பி ஆனார் தனஞ்சய டி செல்வா. அதன் பின் மீண்டும் சரிவுக்கு உள்ளான இலங்கை அணி 226 ரன்களில் 9 விக்கெட்களை இழந்தது இலங்கை அணி.

இறுதி விக்கெட் ஆக ஃபர்னண்டோ களம் இறங்கிய போது இலங்கை அணியின் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட தென் ஆப்ரிக்கா அணிக்கு தான் வெற்றி என ரசிகர்கள் நினைத்த நேரத்தில் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஃபர்னண்டோ ஒரு புறத்தில் விக்கெட் விழாமல் பார்த்து கொள்ள மறுபுறத்தில் குசால் பெரேரா அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.

ஸ்டெய்ன், ரபடடா, ஒலிவர் ஓவர்களிலும் சிக்ஸர்கள் அடித்து அமர்கள படுத்தினார். இவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்த தென் ஆப்ரிக்க வீரர்கள் திகைத்து நின்றனர்.200 பந்துகளில் 5 சிக்ஸர்கள்,12 பவுண்டரிகள் உடன் 153 ரன்கள் குவித்து பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.ஃபர்னண்டோ அவருக்கு பக்கபலமாக 27 பந்துகளில் 6 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். ஃபர்னண்டோ இந்த போட்டியில் 8 விக்கெட்களை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற இலங்கை அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இலங்கை அணி வெளிநாட்டில் 300 ரன்களுக்கு மேல் சேசிங் செய்வது இதுவே முதல் முறையாகும். தென் ஆப்ரிக்கா மண்ணில் இலங்கை அணியின் இரண்டாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker