இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், காயம் ஏற்பட்டுள்ள ஷிகர் தவானுக்கு ரிஷப் பன்ட் மாற்றாக இருப்பார் என கூறியுள்ளார். ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், 33 வயதாக ஷிகர் தவானுக்கு மாற்றை அறிவிக்க இன்னும் பிசிசிஐ எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஐசிசி விதிகளின் படி, பிசிசிஐ தவானுக்கு பதிலாக இன்னொரு வீரரை மாற்ற முடிவெடுத்தால், பின்னர் அவர் குணமடைந்தாலும் அணியில் இணைய முடியாது. கெவின் பிட்டர்சன் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ் தகவல்படி, சிடி ஸ்கேனில் தான் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்துள்ளது, எக்ஸ்ரேவில் தெரியவில்லை. தவான், பயணம் செய்ய வேண்டும் என்றாலும், மருத்துவரின் அறிவுரை தேவைப்படுகிறது. இந்திய அணி எப்போது வேண்டுமானாலும், தவானுக்கு மாற்று வீரரை அணியில் சேர்க்கலாம். ஆனால், அவரின் காயம் பற்றியும், குணமடையும் காலம் பற்றியும் தெரிந்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.