இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானுக்கு, கட்டை விரல் முறிவு ஏற்பட்டுள்ளதால், உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார். நல்ல ஃபார்மில் இருந்த தவானின் இழப்பு, இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. தவான் விலகலை அடுத்து, பல கிரிக்கெட் ரசிகர்கள், அவரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “டியர் தவான், உங்களை மைதானம் மிஸ் செய்யும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், உங்களுக்கு சீக்கிரமாக காயம் சரியாகி மீண்டும் களத்துக்குத் திரும்புவீர்கள் என்று நம்புகிறேன். அதன் மூலம் நமது தேசத்துக்கு அதிக வெற்றிகளைத் தேடித் தர வேண்டும்” என்று உருக்கமாக ட்வீட்டியிருந்தார்.