நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்த உள்ளார். இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக காவல்துறையினரை பணி அமர்த்துவது. அதேநேரத்தில், துணை ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், அதற்காக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.