புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 72–வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி 27–23 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாகக் கேப்டன் அஜய் தாக்கூர் 8 புள்ளிகளும், சுகேஷ் ஹெட்ஜ் 5 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தனர்.
இன்றைய ஆட்ட நேரங்கள்:
இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்–தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்– யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.