தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைக்கான தேர்வினை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 30 மட்டுமே. எஸ்சி, எஸ்டிம் எம்பிசி/டிசி, பிசி மற்றும் பிசிஎம், விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண்டும். விரும்புகிறவர்கள் tnpsc.gov.in. என அதிகாரப்பூர்வ வளைத்தளத்தில் தங்களின் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
எழுத்து மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவை தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும். விண்ணப்பத்தை சமர்பிக்க ஜுன் 28 அன்று கடைசி நாளாகும்.
துணை மின் ஆணையர்: காலியிடங்கள் 12
துணை பொறியியாளர் : காலியிடங்கள் 94
துணை பொறியியாளர் (சிவில், மின்) : காலியிடங்கள் 206
உதவி பொறியாளார் தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் நலம்: காலியிடங்கள் 26
உதவி பொறியாளார் (சிவில்) – காலியிடங்கள் 123 நெடுஞ்சாலை பொறியியல் சேவை
மீன்வள பொறியாளர் சேவை. – 3 காலியிடங்கள்
மீன்வளம் துணை பொறியியாளர் -2 காலியிடங்கள்
தமிழ்நாடு போர்ட் சர்வீஸ் -2 காலியிடங்கள்
ஜூனியர் ஆர்கிடெக் -15 காலியிடங்கள்