தனது அலுவலகத்தில் நிருபர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை அவர்கள் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
தாங்கள் எப்பொழுதும் பெண்களுக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் மீடு இயக்கத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஹீடு,வீடூ என்பது பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்காகப் பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என எனத் தெரிவித்திருந்தார். பின்னர்ப் பினராயி குறித்த கேள்விகளுக்கு வன்முறையைத் தூண்டி அதில் அரசியல் குளிர் காய்வதாகக் குற்றம் சாட்டினார். மத்திய அமைச்சர் குறித்த கேள்விக்கு மதத்தைப் பார்க்க கூடாது, மனதை பார்க்க வேண்டும் எனக் கூறினார்.