தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் கேள்விகள்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் மோடிஅரசு அனில்அம்பானிகளின் கார்பரேட் கம்பெனிகளுக்கான அரசு எனக்குற்றம் கூறும் ஸ்டாலின் அவர்களே தமிழகத்தின் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி உங்கள் குடும்பமே? திமுகவினரே பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு   சொந்தக்கார்ரகள்  பல கல்லூரிகளின் கல்வித்தந்தைகள்? இவர்கள் உருவானது உங்கள் ஆட்சியில்தானே?

மேகதாது அணைகட்டுவதை  மோடி ஏன் தடுக்கவில்லை என கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அணைகட்டும் உங்கள் கூட்டணிக்கட்சியான காங்கிரசை அங்கே அணை கட்ட வேண்டாம்  என வெறும் கோரிக்கைகூட வைக்கவில்லையே ஏன் ?  இதுதான் உங்கள் தமிழக விவசாயிகளின் மீதான அக்கறையா? இதிலும் மோடியை மட்டுமே குறை கூறுவது ஏன்?

கலைஞர் உயிரோடிருந்தால்…இன்று ஸ்டாலின் அமைத்திருக்கும் காங்கிரசுடனான கூட்டணியை அமைத்திருக்கமாட்டார்.  ஏனென்றால் கூடாநட்பு கேடாய் முடியும் எனக்கூறியதும் அவர்தானே? என கேள்விகள் எழுப்பியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *