அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியின் 4 x 400 மீ கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் உள்ளிட்ட இந்திய அணியினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றும் திருச்சி, லால்குடியைப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், இதன் மூலம் தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார். எதிர்காலத்தில் அவர் நிறைய வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.