கோவா மாநில முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த கவலையும், மனவருத்தமும் அளிக்க கூடியதாக உள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஐஐடி-யில் படித்த முதல் மாநிலமுதல்வர் என்ற பெருமைக்குரிய அன்னார் அவர்கள் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் சேவை ஆற்றியவர் இவர் எனவும் இவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் இரங்கல்
