கடந்த ஆண்டு கோடைகாலத்தில் வெப்பநிலை தாக்கம் அதிகம் இருந்தது. இந்த ஆண்டும் கோடைகாலம் தொடங்கும் முன்னரே வெப்பம் தாக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் குறைந்திருந்த வெயிலின் தாக்கம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சேலத்தில் 102, தர்மபுரியில் 101, திருத்தணியில் 100 பாரன்ஹீட் வெப்பநிலை நேற்று பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறிவது, “காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதுடன், கடல்காற்றும் நிலத்தை நோக்கி தாமதமாக வீசுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். சேலம், தர்மபுரி, நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மத்திய மாவட்டங்களில் 4 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது” என்றனர்.
தமிழகத்தில் வெப்ப நிலை உயரும்
