பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சரவை முடிவுகளை விளக்கினார்.அப்போது நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் 4 பள்ளிகள் தமிழகத்தில் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பள்ளிகள் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ளன. மேலும் சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதலாக 2,790 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதேபோல் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அவசர சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.