தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
மேலும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
400க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் வழங்கி வருகிறோம். துணை முதல்வர் சொன்னது போல், தண்ணீர் என்பது பஞ்சம் இல்லை. பற்றாக்குறை தான் உள்ளது. அந்த பற்றாக்குறையை திறன்பட எப்படி ஒரு அரசு சமாளிக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.