இமாச்சல பிரதேசத்தில் 50 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தின் பஞ்சாரில் இருந்து கடாகுஷானியை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
பஸ்ஸில் இருந்த 50 பேரில் சிலர் பஸ்சின் மேல் அமர்ந்து பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்து உள்ளனர் . படுகாயங்களுடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.