ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.