தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இரக்கமே நீடித்து வருகிறது.