
ட்ராவிட் சாதனையை முறியடித்தார் தோனி !!!!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். அவர் ராகுல் ட்ராவிட்டின் சாதனையை முறியடித்து இந்த இடத்தை பிடித்தார். ட்ராவின் 340 போட்டிகளில் ஆடியுள்ளார். முதலிடத்தில் டெண்டுல்கர் 463 போட்டிகளில் ஆடியுள்ளார். முன்னாள் கேப்டனான தோனி பல இளைஞர்களுக்கு உத்வேகமளிக்ககூடியவராக இருந்துள்ளார். இதில் கேப்டன் கோலியும் ஒருவர். கீப்பராகவும் அணிக்கு பெரும்பங்காற்றியுள்ளார்.
தோனியின் ஸ்டெம்புகளை பார்க்காமல் செய்யும் ரன் அவுட்கள், மின்னல் வேக ஸ்டெம்பிங்குகள் அனைத்தும் மற்ற அணி கீப்பர்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாக அமைபவை.
தோனி இந்த உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் ஆடி கடைசி கட்டத்தில் முக்கியமான ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார்.
340 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 10561 ரன்களை குவித்துள்ளார். இதில் 10 சதங்களும், 71 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சம் 183.
37 வயதான தோனி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்னும் அணிக்கு சிறந்த ஃபினிஷராக அவர் விளங்குகிறார்.