டோட்டலைசர் தேவையா?
“டோட்டலைசர்” இயந்திரத்தைப் பயன்படுத்தப் பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
டோட்டலைசர் என்றால் என்ன?
தற்பொழுது மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படுகின்றன. இவற்றினால் ஏற்படும் நேரத்தைக் குறைத்து குறுகிய காலத்தில் மொத்த எண்ணிக்கை காட்டுவதற்கு டோட்டலைசர் பயன்படுக்கிறது.
ஒரு தொகுதியில் உள்ள 14 வாக்கு சாவடிகளின் வாக்கு இயந்திரங்களை, டோட்டலைசர் இயந்திரத்துடன் இணைத்து விட்டால் கட்சிகளின் ஓட்டு சராசரி ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இயந்திரத்தினைப் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2014-ம் ஆண்டுக் கண்டுபிடித்தது. இதுகுறித்துப் பல வித கருத்துகளும், விமர்சனங்களும் எழுத்து உள்ளன.
இதற்கிடையில் பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் மற்றும் ஜோசப், அஜய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது.