கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்
தமிழ்நேரலை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஆஸ்கர் ஆப்கான் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ரோஹித் ஷர்மாவிற்கு நேற்றைய போட்டியில் ஒய்வு அளிக்கபட்டதால் தோனி கேப்டனாக செயல்பட்டார். தோனி தலைமையில் இந்தியா விளையாடும் 200 வது போட்டி இதுவாகும்.
துவக்க வீரராக களமிறங்கிய முகமது ஷேசாத் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். மற்றொரு வீரர் அஹ்மதி 5 ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யபட்டார். ரஹ்மத் 3 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். ஷாகிடி மற்றும் ஆப்கான் குல்தீப் சுழலில் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஷேசாத் 49 ரன்களில் விளையாடி கொண்டு இருந்த போது கொடுத்த கேட்ச்ஐ ராயுடு தவறவிட்டார். இந்திய பவுலர்களின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறடித்த ஷேசாத் தனது 5வது சதத்தை அடித்தார்.116 பந்துகளில் 11 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கலுடன் 124 ரன்கள் எடுத்த ஷேசாத் கேதர் ஜாதவ் பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நபியும் தன் பங்குக்கு 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 56 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கலீல் அஹமது பந்து வீச்சில் வெளியேறினார்.50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மூன்று விக்கெட்களையும் குல்தீப் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராகுல் மற்றும் அம்பத்தி ராயுடு சிறப்பான தொடக்கம் அளித்தனர். அம்பத்தி ராயுடு கால்களை முன் நோக்கி நகர்த்தி ஆஃப் சைடில் சிக்ஸர் உட்பட சில அற்புதமான ஷாட்களை ஆடினார்.110 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த இந்த ஜோடியை நபி பிரித்தார்.4 பவுண்டரிகள்,4 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த ராயுடு நஜிபுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணிக்கு 197 பந்துகளில் 143 ரன்கள் தேவைபட்டது. கைவசம் 9 விக்கெட்ககள் இருந்ததால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது. ஆனால் அதன் பின் சிறப்பாக பந்து வீசிய ரஷித்கான் 60 ரன்களில் ராகுலை வெளியேற்றினார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 44 ரன்களிலும் தோனி 8 ரன்களிலும் நடுவரின் தவறான முடிவால் வெளியேறினர். இந்திய அணியின் கைவசம் ரிவ்யூ இல்லாததால் ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசி 12 பந்துகளில் 13 ரன்கள் தேவைபட்ட போது ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறப்பான பீல்டிங்கால் குல்தீப் மற்றும் கவுல் ரன் அவுட் செய்யபட்டனர். இதனால் இந்திய அணிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைபட்டது, கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்தது.
கடைசி ஓவரை ரஷித்கான் வீச வந்தார்:
முதல் பந்தை தவறவிட்ட ஜடேஜா இரண்டாவது பந்தில் டீப் மிட் விக்கெட்ல் அற்புதமான ஷாட் ஆடினார். சிக்ஸர் ஆக வேண்டிய ஷாட் நூலிழையில் பவுண்டரி ஆக மாறியது. மூன்றாவது பந்தில் ஜடேஜா 1 ரன்னும் நான்காவது பந்தில் கலீல் 1 ரன்னும் எடுத்தனர். இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைபட்ட போது ஆப்கானிஸ்தான் கேப்டன் 7 பீல்டர்களை உள் வட்டதிருக்குள் கொண்டு வந்தார்.ஐந்தாவது பந்தில் ஜடேஜா டாப் எட்ஜ் ஆகி மிட் விக்கெட்டில் நின்ற நஜிபுல்லாவிடம் கேட்ச் ஆனார். இந்தியாவும் 252 ரன்களில் all அவுட் ஆனதால் போட்டி டை ஆனது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அலாம், ரஷீத்கான், நபி தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
சதம் அடித்த ஷேசாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யபட்டார். பதட்டமான சூழ்நிலைலும் பதட்டமின்றி விளையாடி ஆப்கானிஸ்தான் அணி போட்டியை டை செய்தது.