நேற்று ஐசிசி அறிவித்த புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் ரிஷப் பாண்ட் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடருந்து முதல் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் அசத்திய புஜாரா 881 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 673 புள்ளிகளுடன் 17 ஆம் இடத்தில் உள்ளார்.
ஐசிசி தரவரிசை பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை ரிஷப் பாண்ட் பெற்று உள்ளார். பந்து வீச்சாளர் களுக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்கா வீரர் ரபடா 893 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 16 ஆம் இடத்தில் உள்ளார். அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தொடர்கிறது.