டெல்லி அணியில் இணைகிறாரா கங்குலி?

உலகின் பணக்கார கிரிக்கெட் தொடர் ஆன இந்தியன் பிரிமியர் லீக் மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் கிரிக்கெட் ஆலோசகராக கங்குலி இணைந்து உள்ளதாக டெல்லி கேப்டல்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக செயல்படும் இந்த அணியை ஸ்ரேயாஸ் அய்யர் வழிநடத்த உள்ளார். தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், இசாந்த்சர்மா, டிரன்ட் போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்று உள்ளனர். டெல்லி அணி இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *