தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள மக்களின் குறைகள் தீர்ந்தபாடு இல்லை. அவற்றுக்குள் மழை வேறு வந்துவிட்டது.புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இன்னும் சில இடங்களில் பணிகள் துவங்கப்படவில்லை.
நிறைய இடங்களில் சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் கூட அகற்றப்படவில்லை உணவு, குடிநீர் அத்திவாசிய பொருட்கள் வழங்கப்படவில்லை. மின்சாரம் 90 சதவீத இடங்களில் இல்லை.
பால் போன்ற பொருட்கள் கடைகளில் கூடக் கிடைக்கவில்லை. ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் நிவாரண முகாம்களில் நிறைய மக்கள் இருக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது.
மின்சாரத்துறை அமைச்சர் மூன்று நாட்களில் மின்சாரம் வந்துவிடும் என்று சொல்லி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் 10 சதவீத பணிகள் கூட நிறைவடையவில்லை இன்னும் 90 சதவீதம் பணிகள் பாக்கி உள்ளது.
நிறைய இடங்களில் செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. செல்போன் கோபுரங்களின் சீரமைப்பு செய்ய இவ்வளவு நாட்களா! இது தான் போர்கால நடவடிக்கையா எனத் தெரியவில்லை.
விழுந்த மின்கம்பங்கள் இன்னும் அப்படிய விழுந்து கிடக்கின்றன். மின்மாற்றிகளைக் கூட இன்னும் மாற்றவில்லை! அப்புறம் எங்கிருந்து கரண்ட் வருவது.
ஆறாவது நாளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேலையில் இன்னும் துண்டிக்கப்பட்ட பகுதிகளை யாரும் பார்வையிடவில்லை. அங்கு ஒரு சொட்டு தண்ணிக்கு அலையும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது. கிராமாங்களில் தன்னார்வ நண்பர்கள்மூலம் ஏதோ உதவிகள் நடத்து கொண்டுள்ளது.
வெளி உலகத் தொடர்பு மொத்தமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.
அவர்கள் கூறியது போல் முன்கூட்டியே செய்த ஏற்பாடுகள் என்ன ஆனது எப்பொழுது கரண்ட், குடிநீர், பால் போன்ற அத்திவாசியப் பொருட்கள் கிடைக்கும் என்பது பற்றிய தகவல் இல்லை.
இதுதான் டெல்டாவின் உண்மை நிலைமை.