காங்கிரஸ் கட்சியின் புதிய பொது செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் புதிதாக இணைந்து உள்ளார். @priyankagandhi என்ற முகவரியில் கணக்கு துவங்கி உள்ளார்.பிரியங்கா காந்தி டிவிட்டரில் இணைந்த சில நிமிடங்களில் அவரை 70 ஆயிரம் பேர் பின் தொடர ஆரம்பித்து உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மயவாவதியும் சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் இணைந்தது குறிப்பிடதக்கது.
