நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் டி20 போட்டியானது இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்து அணி் தொடக்கத்தில் தடுமாறியது.10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 55 ரன்கள் எடுத்து இருந்த நியூசிலாந்து அணி அதன் பின் சுதாரித்து கொண்டு விளையாடியது.
அந்த அணியின் ரோஸ் டெய்லர் 37 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரஸ்வெல் 26 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 44 ரன்களும், குக்லிஜின் 4 சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக ரஞ்சிதா 3 விக்கெட்களும், மலிங்கா 2 விக்கெட்கலும் கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி மோசமான பேட்டிங்கால் அனைத்து விக்கெட்களையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தரப்பில் அதிகபட்சமாக திசர பெரேரா 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியின் பெர்குசன்,இஷ் சோதி தலா மூன்று விக்கெட்களை கைபற்றி அசத்தினர்.44 ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர் பிரஸ்வெல் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.