டி20 போட்டிகளிலும் ஓய்வு பெறும் பிரண்டன் மெக்கல்லம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி 20 தொடரில் விளையாடி வருகிறார்.இத்தொடருடன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற போவதாக மெக்கல்லம் அறிவித்து உள்ளார்.

பிரண்டன் மெக்கல்லம் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இவரது தலைமையின் கீழ் முதல் முறையாக நியூசிலாந்து அணி கடந்த உலககோப்பை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. உலகின் தலைசிறந்த ஃபில்டர்களில் ஒருவரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன இவரின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *