கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளது. அதன் முதல் போட்டி கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது. நடப்பு உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிரத்வெயிட், பிராவோ, பொலார்டு, லீவிஸ், ரஸ்ஸல், ராம்டின் போன்ற சிறந்த டி20 வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் தவான், ராகுல், ரிஷப் பாண்ட்,கிருநல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி வீரர்களும் பும்ரா, புவனேஷ்குமார், கலீல் அஹமது போன்ற வேகபந்து வீச்சாளர்களும் இடம் பெற்று உள்ளனர். சம பலமுள்ள இரு அணிகளும் கோதாவில் இறங்குவதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்த்து காத்து உள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான நேரடி டி20 தொடரில் இந்தியா இதுவரை கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது