சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 தரவரிசை பட்டியலில், பந்துவீச்சு, பேட்டிங் என இரு பிரிவிலும் இரு இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 726 புள்ளிகளுடன் 5-ம் இடம் பெற்றுள்ளார். முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஒரே ஒரு இந்திய வீரர் இவர் மட்டுமே.டி20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சு தரவரிசையிலும் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே.
