டி 20 – யில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் போரான் அதிகபட்சமாக 58 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் டாம் குரான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 18.5 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்ட்டோ அதிகபட்சமாக 68 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *