இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 4 வது ஒரு நாள் போட்டியானது இன்று ஹாமில்டனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் களம் இறங்கியது. ஷுப்மன் கில் தன் முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வலிமையான பேட்டிங் வரிசை டிரெண்ட் பவுல்ட், கிராண்ட்ஹோம்ன் சிறப்பான பந்து வீச்சில் ஆட்டம் கண்டது.
இந்திய அணி 31 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாகள் 18 ரன்களும், ஹர்திக் பாண்டியா 16 ரன்களும் எடுத்தனர். இந்திய வீரர்கள் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் டக் அவுட்டில் வெளியேறினர்.
10 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீரர் பவுல்ட் 21 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதில் 4 ஓவர்கள் மெய்டன்களாக அமைந்தன. மற்றொரு வீரர் கிராண்ட்ஹோம் 26 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து எளிதாக வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 30 ரன்களுடனும், ரோஸ் டெய்லர் 37 ரன்களிலும் களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களை கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட பெற்றார்.