அடுத்த வருடம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்க்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக சென்னையை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தெரிவித்து இருந்தார். இவர் கலிபோர்னியா மாகாணத்தில் அரசு வக்கீலாக பதவி வகித்தது குறிப்பிடதக்கது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என்றும் ஜுலை மாதத்தில் வேட்பாளர் அறிவிக்கபடுவார் எனவும் ஜனநாயக கட்சி சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியினர் இடையே பேசிய கமலா ஹாரிஸ் டிரம்ப்ன் கொள்கைகளை கடுமையாக சாடினார்.