டிரம்புக்கு சாதகமா? பாதகமா?

அமெரிக்க தேர்தல் முறைகள் சற்று வித்தியாசமானது. இரண்டு அவைகள் உண்டு ஒன்று செனட் (மேலவை), பிரிதிநிதிகள் சபை(கீழவை) இரண்டு அவைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு எண்ணப்பட்டது கடந்த பலவருடங்களுக்குப் பிறகு அதிக அளவிலான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பதிவு செய்தனர். உலக அளவில் இந்தத் தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது.
தனது அரசின் சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாக இத்தேர்தல் அமையும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இத்தேர்தலில் மொத்தம் பிரிதிநிதிகளின் (கீழவைக்கு) 435 உறுப்பினர்களையும்,
செனட் (மேலவைக்கு) 33/100 உறுப்பினர்களையும் தேர்தெடுக்க தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிவுகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
பிரிதிநிதிகளின்சபை(கீழவை) முடிவு:
ஜனநாயகக் கட்சி — 219 (+26)
குடியரசுக் கட்சி(டிரம்ப்) — 193 (-26)
செனட் முடிவு:
ஜனநாயகக் கட்சி — 45 (-2)
குடியரசுக் கட்சி(டிரம்ப்) — 51 (+2)
ஆளுநர் முடிவுகள்:
ஜனநாயகக் கட்சி — 22 (+7)
குடியரசுக் கட்சி(டிரம்ப்) — 25 (-7)
முடிவுகளின் இறுதி:
முடிவுகளின் இறுதியில் செனட்(மேலவையில்) டிரம்ப் தனது உற்ப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளார். ஜனநாயக கட்சிக்குச் சற்று இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிதிநிதிகள் சபை அதாவது(கீழவை)யை ஜனநாயக கட்சி கைப்பற்றி உள்ளது. டிரம்ப் அரசுக்கு இச்சபையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டிரம்புக்கு ஏற்படும் சாதகம் என்ன? பாதகம் என்ன?
ஆளுங்கட்சியாக இருக்கும் குடியரசுகட்சி(டிரம்ப் கட்சி) –க்கு சற்று சாவலான விஷயம் தான் ஏனென்றால் பிரிதிநிதிகளின் சபையில் (கீழவையில்) அதிகளவிலான உறுப்பினர்களை ஜனநாயக கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் இச்சபையில் அவர்களின் ஆதிக்கம் அதிகம் ஆகும். ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.
டிரம்புக்கு சாதகம் என்ன?
செனட் சபையில் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை இத்தேர்தல் மூலம் அதிகரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *