இந்திய விமான படை குண்டு வீச்சில் ஜெய்ஷ் இ முகமது முகாம் தகர்க்கப்பட்டு உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய விமான படை நடத்தி உள்ளது.12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.1000 கிலோ அளவில் ஆன குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இ்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் முன் புல்வாமாவில் இரண்டு தமிழர்கள் உட்பட நம் வீரர்கள் 44 பேர் செய்த உயிர்த்தியாகத்திற்கான விலையைத் தீவிரவாதிகள் கொடுத்திருக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்.இந்தியாவின் வலிமையை பாகிஸ்தானுக்கு துணிச்சலுடன் சொன்ன நம்முடைய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துகள்…! என கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் அவர்கள் கூறுவது என்ன?
