அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவள்ளுரில் நேற்று பிரச்சாரம் செய்த தினகரன் அவர்கள் தேர்தலில் சின்னம் முக்கியம் அல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம் எந்த சின்னம் கொடுத்தாலும் தமிழக மக்கள் அமமுகவை ஜெயிக்க வைப்பார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 80 சதவீத இளைஞர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் அமமுகவை சுயேட்சை என்று கூறி சின்னம் கொடுக்க மறுக்கின்றனர்.எப்படியாவது அமமுகவின் சின்னைத்தை முடக்கி விடுங்கள் என அதிமுகவினர் அவர்களின் டாடி மோடியிடம் கேட்டு இருப்பார்கள்.
பாமக ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் அது மானங்கெட்ட கூட்டணி ஆகும்.விரோத தமிழக அரசையும் , மத்திய ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் சுயேட்சைகள் நாம் என கூறினார்.