சுவாமி மலையில் பத்திரிக்கை நிருபர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி அவர்கள் பத்து வருடங்கள் அரசியலில் இல்லாத நான் இடைத்தேர்தலில் அம்மா வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதியில் நின்றேன். கட்சியை விட்டு நீக்கிய பின் அதுவும் சுயேட்சையாக நின்றேன்.
அந்த தொகுதி மக்கள் என்னை ஏற்று கொண்டார்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இந்த மத்திய, மாநில ஆட்சிகளை நாங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். நடக்க இருக்கும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மத்திய, மாநில ஆட்சிக்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.