அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதில் ஆடம்பர வரவேற்பு வேண்டாம் ,உங்கள் அன்பு ஒன்றே போதும்! பொன்னாடை, பூங்கொத்து, பட்டாசுகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் தோரணக் கொடிகளைத் தவிர்த்திடுங்கள்! தேர்தல் களத்தில் மட்டுமே முழுக்கவனமும் இருக்கட்டும்! போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தத்தொல்லையும் ஏற்படக்கூடாது, பட்டாசுகள்,வாகனங்கள் போன்றவை நம் வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேரும் என்பதை மறந்துவிடக்கூடாது. உள்ளன்போடும்,உரிமையோடும் விடுக்கும் இவ்வேண்டுகோளைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
டிடிவி தினகரன் அவர்களின் வேண்டுகோள்?
