அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இன்று தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவச்செல்வங்களை மனதார வாழ்த்துகிறேன். வாழ்வில் நீங்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வைப் பதற்றமில்லாமல் எழுதி வெற்றி வாகை சூடுங்கள். இடையறாத உழைப்பும், இறையருளும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும். வாழ்த்துகள்… என குறிப்பிட்டு உள்ளார்.
டிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி
